News December 8, 2025
IUML தவெகவில் இணைய திட்டமா?

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலுக்கு 5 சீட்கள் கேட்டிருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பு, கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம். ஒருவேளை கேட்பதை கொடுக்காத பட்சத்தில் IUML தவெகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான Official தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூரில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (மி.பி.வ), மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையை https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் (டிச.31)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்தார்.
News December 10, 2025
திருமணச் செலவுகள் எந்த நாடுகளில் எவ்வளவு ஆகிறது?

திருமணச் செலவுகள் பெரும்பாலும், விருந்தினர்களின் எண்ணிக்கை, திருமணம் நடைபெறும் இடம் மற்றும் இருவீட்டாரின் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே இருக்கும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் சராசரியாக திருமணச் செலவுகள் எவ்வளவு ஆகின்றன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 10, 2025
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட தவெக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.


