News February 28, 2026

IUML கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

image

IUML கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன்படி, அக்கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளதாக IUML தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இப்போது 2-ஆக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 2, 2026

37 மணி நேரம் பயணித்து தாக்கிய US விமானங்கள்!

image

US-ன் ‘B-2 Spirit Stealth Bomber’ விமானங்கள், ஈரானின் பூமிக்கடியில் இருக்கும் ஏவுகணை மையங்களை குறிவைத்து தாக்கி அழித்திருப்பதாக US அறிவித்துள்ளது. ஈரான் அருகிலுள்ள தங்கள் விமான தளங்களை பயன்படுத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், மிசோரியில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொண்டு, சுமார் 37 மணி நேரம் பறந்து இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.

News March 2, 2026

BREAKING: மொத்தமாக மாறினர்.. விஜய்க்கு இழப்பு

image

திமுக அளிக்கும் 25 தொகுதி ஆஃபரை ஏற்க முடியாது என காங்., வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என காங்., MLA-க்களிடம் கருத்து கேட்டதில், பெரும்பாலானோர் திமுகவுடனே செல்ல வலியுறுத்தினராம். முன்னதாக, காங்., தரப்பிலிருந்து பலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இச்செய்தி விஜய் தரப்புக்கு ஏமாற்றமளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

பாலியல் வழக்கில் சிக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

image

பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!