News August 20, 2025

அணியில் ஷ்ரேயஸ் இல்லாதது அநியாயம்!

image

நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயஸ் ஏன் தேர்வு செய்யவில்லை என அஸ்வின் BCCI-யிடம் கேள்வி எழுப்பியுள்ளார். IPL-ல் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இடம் கிடைக்காதது மிகவும் அநியாயமானது என்ற அவர், கில் நல்ல பார்மில் இருக்கிறார் என்றால், ஷ்ரேயஸும் ஓரளவு நல்ல பார்மில் தானே இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஷ்ரேயஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கணுமா?

Similar News

News January 18, 2026

ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹6,000 வரை உயர்ந்தது

image

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் பர்ஸை பதம் பார்த்துள்ளது. டிக்கெட் கட்டணம் சாதாரண நாள்களை விட 3 மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மதுரை – சென்னைக்கு ₹6,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 18, 2026

இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

image

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.

News January 18, 2026

வங்கி கஸ்டமர்களுக்கு HAPPY NEWS

image

ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் RBI புதிய விதிகளின்படி, வங்கியால் ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு ₹30 லட்சம் வரை இழப்பீடு வழங்க, வங்கி குறைதீர்ப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மன உளைச்சல், நேர விரயத்திற்காக கூடுதலாக ₹3 லட்சம் வரை பெற முடியும். புகார்களை சரிபார்க்க மத்திய ரசீது மற்றும் செயலாக்க மையம் நிறுவப்பட உள்ள நிலையில், <>https://cms.rbi.org.in<<>> இணையத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!