News November 27, 2024
எலான் மஸ்க் கடுப்பானாலும் பரவாயில்லை: SK

சமூக வலைதளங்களை குறிப்பாக X- தளத்தை குறைவாக பயன்படுத்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அது நமது நேரத்தை விழுங்கிவிடுவதாகவும், மற்றவர்களின் எண்ணத்தை நமது திணிக்கும் ஊடகமாக சமூக வலைதளங்கள் மாறி இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த பேச்சிற்காக எலான் மஸ்க் தனது கணக்கை பிளாக் செய்தால், அதுவே தனது முதல் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அக்சர் படேல், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் யாரை மிஸ் பண்ணுறீங்க?
News August 19, 2025
உயிர் பயம் உள்ளது.. அஜித் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
News August 19, 2025
சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.