News September 10, 2024
அது நாங்கள் அல்ல: கமல் நிறுவனம் அறிவிப்பு

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்நிலையில், இந்த நிறுவனம் புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாகவும், இதில் நடிக்க விரும்புவோர் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி சிலர் வலைதளங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்குவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.
News August 21, 2025
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. TVK புது தீம் சாங்!

மதுரையில் இன்று நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பெயரில் தவெகவின் புதிய தீம் சாங் வெளியாகிறது. கொடி பாடலுக்கு இசையமைத்த தமன் தான் இந்த பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் 1967,1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது பற்றியும், விஜய்யின் அரசியல் பேச்சும் இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
News August 21, 2025
தவெக மாநாட்டில் பரபரப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை

மதுரை தவெக மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுக்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.