News March 12, 2025

இரவில் மழை கொட்டப் போகுது

image

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News July 10, 2025

X நிறுவன சிஇஓ ராஜினாமா

image

X நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான (சிஇஓ) லிண்டா யாக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என மாற்றினார். அதன்பிறகும் சிஇஓ பதவியில் 2 ஆண்டுகளாக லிண்டா நீடித்தார். இந்நிலையில் தனது பதவி விலகல் குறித்து சமூகவலைதளத்தில் லிண்டா பதிவிட்டுள்ளார். இதை வரவேற்று பதிவிட்டுள்ள எலான் மஸ்க், உங்கள் பங்களிப்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

மோடிக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கிய நமீபியா

image

நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வெல்விட்சியா மிரபலீஸ்’ விருது PM மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக அமைதி, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக மோடிக்கு இவ்விருதை நமீபியா வழங்கியுள்ளது. உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக மோடி தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் 27-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2025

மரண தண்டனையில் இருந்து தப்ப என்ன வழி?

image

கொலைக் குற்றச்சாட்டில் ஏமன் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் <<16997656>>16-ம் தேதி மரண தண்டனை<<>> நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்கலாம். இதற்காக கொலையானவரின் சகோதரருக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் பணம், சவுதி (அ) UAE-யில் நிரந்தர வசிப்பிடம் வழங்க மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசு உதவியுடன் முயற்சித்து வருகின்றன.

error: Content is protected !!