News September 1, 2025
நான் குழந்தை பெறுவது கடினம்: வருந்திய சன்னி லியோன்

திருமணமாகி 10 மாதங்கள் வரை இயற்கையாகவே கருவுற முயற்சித்ததாக சன்னி லியோன் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், தனது கருவில் வளர்ச்சி இல்லை என்பதால், நான் குழந்தை பெறுவது கடினம் என டாக்டர்கள் கூறியதால் அதிக வருத்தம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். முதலில் பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன் – வெப்பர் தம்பதி, பின்னர் வாடகைத் தாய் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
Similar News
News September 3, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

செப்.5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இம்மாதத்தில் காலாண்டு தேர்வுகள் வருவதால் மாணவர்கள் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களுக்காக அரசு ஸ்பெஷல் பஸ்களையும் இயக்கி வருகிறது. SHARE IT.
News September 3, 2025
அணுகுண்டை விட 200 மடங்கு powerful.. சீனாவின் ஏவுகணை

சீனாவின் <<17598250>>Victory Parade-ல்<<>> நேற்று இடம்பெற்ற, அதன் அணு ஆயுத ஏவுகணை அதிக கவனம் ஈர்த்துள்ளது. DF-5C என்று பெயரிடப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 20,000 கிமீ என்பதால், உலகின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த முடியுமாம். இது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட 200 மடங்கு சக்திவாய்ந்ததாம். இந்த ஆயுத அணிவகுப்பே, ‘கிட்ட வராதே’ என்று அமெரிக்காவை எச்சரிக்க தானாம்.
News September 3, 2025
இந்தியா vs பாக்., போட்டிக்கான டிக்கெட் விலை ₹11,000

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. அதன்படி, டிக்கெட்டின் ஆரம்ப விலை ₹11,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ₹12,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்களை துபாய், அபுதாபி மைதான கவுன்ட்டர்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.