News May 7, 2025
திருமணத்திற்குப் பிறகு இதைச் செய்வது தான் நல்லது!

இன்சூரன்ஸ் மிக அவசியமானது என்றாலும், அதனை திருமணத்திற்கு முன் எடுக்க வேண்டாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான சாய்ஸ் திருமணத்திற்கு பிறகு எடுப்பதே என்கின்றனர். குறைந்தபட்சம் காப்பீட்டின் கோரிக்கை வரம்பு ₹2 லட்சமாக இருக்க வேண்டும் என்றும், தம்பதிகளாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது, மகப்பேறு காப்பீடும் அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்கள். SHARE IT.
Similar News
News November 22, 2025
காந்த கண்ணழகி கீர்த்தி சுரேஷ்

விஜய் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படம் மூலம் புதிய உயரத்தை தொட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக உள்ள கீர்த்தியின் ‘ரிவால்வர் ரிட்டா’ படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் புரோமோஷனோடு சேர்த்து அவர் போட்ட புதிய போட்டோக்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்திழுக்கிறது.
News November 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது. *அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு. *ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும். *ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் தொடங்குகிறது.
News November 22, 2025
20 ஆண்டுகளுக்கு பின் முக்கிய பொறுப்பை இழந்த நிதிஷ்

10-வது முறையாக நிதிஷ் குமார் CM-ஆக பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில் 20 ஆண்டுகளாக நிதிஷிடம் இருந்த உள்துறை DCM சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு DCM விஜய் குமாருக்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகளை CM தன்னிடம் வைத்துள்ளார்.


