News February 18, 2025

மதுக்கடை தான்… ஆனா இது கொஞ்சம் புதுசு

image

மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் 1 முதல், குறைந்த போதை தரும் மதுபானக் கூடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. அதேபோல, உஜ்ஜயின், மஹேஷ்வர் போன்ற 17 புனித தலங்கள் உள்பட 19 நகரங்களில் உள்ள 47 மதுக்கடைகள், ஏப்.1 முதல் மூடப்படுகின்றன. புதிய மதுபானக் கூடங்களில் 10%க்கும் கீழ் உள்ள பீர், ஒயின் ஆகிய மதுபானங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. TNஇல் இந்த நடைமுறையை செயல்படுத்தலாமா? மதுக்கடையை முழுவதுமாக மூடனுமா? CMT Here.

Similar News

News September 13, 2025

FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

image

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?

News September 13, 2025

லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

image

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.

News September 13, 2025

செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.

error: Content is protected !!