News December 11, 2025

ITI-யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

image

தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1964 முதல் 2019 வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், தோல்வியடைந்தவர்கள் மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி செல்லாமல் உள்ளனர். சான்றிதழ்கள் பெற விரும்புவோர் ஐ.டி.ஐ., வேலை நாட்களில் உரிய ஆவணங்கள் சமர்பித்து சான்றிதழ்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55765 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

தேனி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

News December 17, 2025

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவஜோதி வீட்டிற்கு சென்ற ராகேஷ் அவரது உறவினர் வெற்றி ஆகியோர் சிவஜோதியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது (டிச.16) செய்தனர்

News December 17, 2025

தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பணிபுரிந்தவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற https://theni.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!