News September 30, 2025

ஆயுத பூஜையில் கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருள்கள்!

image

எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், அதற்கு உதவும் கருவி, பொருளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரியுங்கள். மேலும் வீட்டு உபயோக கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி போன்றவற்றுக்கும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் ஒரே நேரத்தில் வருவதால், பூஜையறையில் புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றையும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

Similar News

News September 30, 2025

சற்றுமுன்: பெலிக்ஸ்க்கு திடீர் மாரடைப்பு

image

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிசிக்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவில்லை.

News September 30, 2025

ஆயுத பூஜை வாழ்த்துகள் சொல்லிட்டீங்களா..

image

*தொழில் சிறக்க, வளம் பெருக இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். *இந்த ஆயுத பூஜை நன்நாளில் நீங்கள் தொடங்கும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள். *தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் தேவையான கருவிகளை இந்நாளில் தவறாமல் பூஜை செய்து வணங்குவோம். *நீங்கள் செய்யும் தொழில் செழித்தோங்க நல்வாழ்த்துகள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதை தவறாம அனுப்புங்க..

News September 30, 2025

மோடி லடாக்கிற்கு துரோகம் செய்கிறார் – ராகுல் காந்தி

image

கார்கிலில் ராணுவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பிரதமர் மோடி லடாக்கிற்கு செய்யும் துரோகம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அந்தஸ்து கோரி போராடும் லடாக் மக்களுடன், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!