News September 18, 2025
Footage-ல அப்படி தெரிஞ்சிருக்கும்: அண்ணாமலை

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த EPS, முகத்தை மறைத்தபடி காரில் சென்றது போன்ற <<17734040>>போட்டோ<<>> வைரலானது. இதனை CM ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில், இருவரது சந்திப்பும் அனைவருக்கும் தெரியும் என்பதால், முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் EPS-க்கு இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், Footage-ல் முகத்தை மூடியபடி தெரிந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
பாக் – சவுதி ஒப்பந்தம்: அலர்ட் மோடில் இந்தியா

<<17745829>>பாகிஸ்தான்- சவுதி <<>>அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருவர் தாக்கப்பட்டால், மற்றொருவர் உதவிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில், நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அனைத்து வழிகளிலும் நாட்டின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறியுள்ளது.
News September 18, 2025
Beauty Tips: உங்கள் முகத்தில் செய்யவே கூடாத 3 தவறுகள்

உங்கள் முகத்துக்கு ஏற்றார் போல நல்ல Facewash-ஐ வாங்கி பயன்படுத்தினாலும், அதனால் நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லையா? இந்த 3 தவறுகளை பண்றீங்களான்னு செக் பண்ணுங்க. ➤Facewash-ஐ அப்ளை செய்து 1 நிமிடத்துக்கு மேல் கழுவாமல் இருந்தால் முகம் ட்ரை ஆகும் ➤முகத்தை அழுத்தி தேய்க்க வேண்டாம். Gentle-ஆக மசாஜ் செய்யுங்கள் போதும் ➤அடிக்கடி Facewash கொண்டு முகத்தை கழுவவேண்டாம். உங்கள் தோலை இது பாதிக்கலாம். SHARE.
News September 18, 2025
₹100 கோடி வசூலித்த ‘மதராஸி’

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் உலகளவில் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ முதல் 2 நாளில் ₹50 கோடி வசூலித்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சறுக்கியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’, ‘அமரன்’ வரிசையில் மதராஸியும் ₹100 கோடி வசூலில் இணைந்துள்ளது. நீங்க படம் பார்த்தாச்சா?