News December 14, 2024

விஜய் யோசித்து பேசினால் நல்லது: சரத்குமார் அட்வைஸ்

image

மணிப்பூர் விவகாரம் குறித்து விஜய் பேசியதற்கு சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ஏற்கனவே மும்மொழிக் கொள்கை வேண்டாம், நீட் வேண்டாம்னு விஜய் பேசியிருந்தார். இப்போது மணிப்பூர் பற்றி அவர் பேசியுள்ளார். இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விஜய் ஒரு விஷயத்தை பற்றி பேசும் முன்பு, அதை பற்றி சிந்தித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Similar News

News March 14, 2026

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

image

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

News March 14, 2026

NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

image

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

மார்ச் 14: வரலாற்றில் இன்று

image

▶1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது. ▶1998 – சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ▶1918 – தென்னிந்திய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த தினம். ▶1965 – பாலிவுட் நடிகர் அமீர் கான் பிறந்த தினம். ▶1986 – தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். 1883 – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.

error: Content is protected !!