News October 24, 2024
20 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை கொட்டும்

காலை 4 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தி.மலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, குமரியில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
Similar News
News January 19, 2026
உலக சந்தையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,673-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $5 உயர்ந்து $93.75 ஆக உள்ளது. இதனால், இன்று(ஜன.19) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும். ஈரான், வெனிசுலா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச பிரச்னைகளே தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 19, 2026
இனி ஜடேஜா வேண்டாம்..

NZ-க்கு எதிரான ODI தொடரில் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் 43 ரன்களை மட்டுமே அடித்த அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவரை ODI அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்கின்றனர். மேலும், அவருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 19, 2026
அதிமுகவை வழிநடத்தும் CM ஸ்டாலின்: சேகர்பாபு

அதிமுக தேர்தல் வாக்குறுதியில், திமுகவின் முன்னெடுப்பை தான் பின் தொடர்ந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய திட்டங்களை சிந்திக்க முடியும்; அதிமுகவினருக்கு சிந்தனையில் ஒன்றுமே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். CM ஸ்டாலினின் வழிகாட்டுதலில் தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை இதிலிருந்து ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


