News April 26, 2024

ஏப்ரல் 30, மே 1, 2ஆம் தேதிகளில் மழை பெய்யும்

image

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Similar News

News February 3, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. வந்தாச்சு அப்டேட்

image

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை, இம்மாதம் முதல் <<19033682>>₹2,500<<>> ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழகத்திலும் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஏற்கெனவே CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மார்ச்சில் வெளியாகும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News February 3, 2026

82 வயதில் அடுத்த சாதனைக்கு தயாரான இளையராஜா

image

‘வேலியன்ட்’ சிம்பொனியை கடந்தாண்டு லண்டனில் அரங்கேற்றம் செய்து இளையராஜா உலக அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள தனது புதிய ஸ்டூடியோவிற்கு வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதாகவும், தனது 2-வது சிம்பொனியின் எழுத்துப் பணி ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். தற்போது அவருக்கு 82 வயதாகும் நிலையில், அடுத்த சாதனைக்கு இளையராஜா தயாராகி உள்ளார்.

News February 3, 2026

வேட்டி, சேலையில் துரோகம் செய்யும் திமுக: அருண்ராஜ்

image

ஏழைகளுக்குத் தரவேண்டிய பொருட்களை பதுக்கி, திமுக அரசு முறைகேடாக தில்லுமுல்லு செய்திருப்பதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் ஆயிரக்கணக்கில் இலவச வேட்டி, சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஏழைகளுக்கு துரோகம் செய்யும் தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டியடிப்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!