News October 25, 2024
காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழை காெட்டும்

இன்று (அக்.25) காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், குமரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News November 13, 2025
டெல்லியில் மீண்டும் வெடிச்சத்தம்!

டெல்லி, மஹிபால்பூர் பகுதியில் காலை 9.18 மணிக்கு சக்தி வாய்ந்த வெடி சத்தம் கேட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்னொரு வெடிச்சத்தம் கேட்டுள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்தின் முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
News November 13, 2025
ECI மீது BJP MLA வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

முறையாக வீடுதோறும் சென்று SIR படிவங்களை பூத் லெவல் ஆபிசர்கள் (BLO) கொடுப்பதில்லை என வானதி குற்றம்சாட்டியுள்ளார். ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுப்பதாகவும், முறையாக ஆய்வுசெய்து, படிவத்தை அதற்குரிய வெப்சைட்டில் ஸ்கேன் செய்வது இல்லை என்றும் சாடியுள்ளார். ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என சோதிப்பது இல்லை எனவும் அதிகாரிகளுக்கு சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.
News November 13, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று(நவ.13) ஒரே அடியாக ₹1,600 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹94,440-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ₹94,000 தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


