News August 3, 2024
14 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
நீலகிரி மக்களே உஷார்: வெளுக்கப்போகும் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.04), நீலகிரி மாவட்டத்திற்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE பண்ணுங்க!
News December 4, 2025
தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


