News November 16, 2024

இரவு 1 மணி வரை இங்கு மழை வெளுத்து வாங்கும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

Similar News

News March 4, 2026

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,?

image

திமுக – காங்., கூட்டணியை உறுதிப்படுத்த இறுதியாக ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 40+ கேட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம். இதனால், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்., விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News March 4, 2026

‘கேரளா ஸ்டோரி 2’ TN அரசுக்கு சீமான் எச்சரிக்கை

image

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தை TN-ல் திரையிட திமுக அரசு அனுமதித்தது வெட்கக்கேடானது என்றும், உடனடியாக தடைசெய்ய தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரித்துள்ளார். இதுபோன்ற படங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2026

தவெகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களா?

image

விஜய் அமைத்த அருண்ராஜ் தலைமையிலான குழு, தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாம். அதுபோல, முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளதாக TVK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!