News May 8, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் 30-40கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News September 24, 2025
வரலாற்றில் இன்று

*1950 – கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் பிறந்த தினம்
*1996 – ஐ.நா.வின் அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் 71 நாடுகள் கையெழுத்திட்டன
*2007 – T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்
*2014 – மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது
*2015 – சவூதி அரேபியா ஹஜ் பயண கூட்டத்தில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர்
News September 24, 2025
விலை குறைத்த அத்யாவசிய பொருள்கள்

GST வரி குறைப்பால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதில் சிலவற்றின் விலை பட்டியல் இதோ: அமுல் வெண்ணெய்(₹4 – ₹58வரை ), அமுல் நெய் (₹40 – ₹610), Maggi (₹4 600G), Nescafe(₹30), Sunfest marie light (₹20), nutella (₹5- ₹399), டாபர் ஜூஸ் (₹8) உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேபோல் ஹார்லிக்ஸ், கிஷான் ஜாம், ப்ரூ காபி உள்ளிட்டவையின் விலையும் குறைந்துள்ளது.
News September 24, 2025
தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.