News August 2, 2024
சென்னையில் இரவு மழை பெய்யும்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக கூடிய இந்த மேகங்கள், வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னை நகருக்கு மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 16, 2025
பதட்டம் நிறைந்த IND vs PAK போட்டிகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதும் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றாலும், இதனை புறக்கணித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த இந்தியா – பாக்., போட்டிகள் குறித்து மேலே Swipe செய்து பாருங்கள். உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
News September 16, 2025
குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு: வைகோ

CM ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டதாக வைகோ கூறியுள்ளார். திருச்சி மதிமுக மாநாட்டில் பேசிய அவர், திமுக சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு தான் காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதை இம்மாநாட்டில் பிரகடனம் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 16, 2025
மதமென பிரிந்தது போதும்.. மனதை தொட்ட நிகழ்வு

இந்துவாக பிறந்து, தேவாலயத்தில் வளர்ந்து, இஸ்லாமிய நபராக வாழ்ந்த கதையை ‘சிட்டிசன்’ படத்தில் பார்த்திருப்போம். அதேபோல்தான், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது இறுதிச்சடங்கை இந்து முறைப்படி செய்ய விருப்பப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், இஸ்லாமியரான சஃபீர் என்பவர், கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இறுதிச்சடங்கை செய்துள்ளார். இந்த மனதை வருடும் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.