News March 26, 2024
அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு (மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய வேளைகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 22, தை 8 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 22, 2026
அமெரிக்கா காலியாகிவிடும்: ஈரான் மிரட்டல்

அமெரிக்கா, தங்களது உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி-வை தாக்க முயற்சித்தால் அவர்களின் உலகத்தை தீக்கிரையாக்கிவிடுவோம் என்று அமெரிக்காவுக்கு கடுமையான மிரட்டலை ஈரான் ஆயுத படை விடுத்துள்ளது. இதானால், தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரானை அழித்துவிடுவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.


