News May 18, 2024

இந்த ராசியினருக்கு இனிமேல் கஷ்ட காலம்

image

குரு பகவான் அண்மையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த இடப்பெயர்வு தனுசு, துலாம், மீன ராசிகளுக்கு தீமையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

Similar News

News March 27, 2026

லிவ்-இன் ரிலேஷன் குற்றமல்ல.. கோர்ட் அதிரடி

image

லிவ்-இன் ரிலேஷனில் உள்ள இருவர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் HC-ல் வழக்கு தொடர்ந்தனர். இதன் மீதான விசாரணையில், திருமணமான ஒரு ஆண் வேறொரு வயதுவந்த பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருப்பது குற்றமல்ல என்று HC தெரிவித்துள்ளது. சமூக கண்ணோட்டத்தில் திருமணமானவர் வேறு பெண்ணுடன் உறவில் இருப்பது குற்றமாக கருதப்பட்டாலும், சட்டம் என்பது வேறு; அறநெறிகள் என்பது வேறு என்றும் HC தெளிவுபடுத்தியுள்ளது.

News March 27, 2026

அதிமுக-பாஜக MLA இடையே டீலிங்.. சுவாரஸ்யம்

image

2026 தேர்தலுக்காக பாஜக MLA வானதியும் அதிமுக MLA அம்மன் அர்ஜுனனும் சிட்டிங் தொகுதியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துள்ளனர். 2016-ல் கோவை தெற்கில் வென்ற அர்ஜுனன், 2021-ல் வானதி சீனிவாசனுக்கு அதை விட்டுக்கொடுத்து விட்டு, அவர் வடக்கில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை கோவை தெற்கிலேயே அர்ஜுனன் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், வானதி வடக்கில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மத்திய அரசு விளக்கம்

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு தேவையான LPG கையிருப்பில் உள்ளதாகவும், உள்நாட்டு LPG உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 8 லட்சம் டன் LPG இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!