News March 18, 2024
சோனியாவிடம் அழுதது நான் இல்லை

மும்பையில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல், மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் காங்., தலைவர் ஒருவர் சோனியாவை சந்தித்து அழுததாக கூறினார். EDயிடம் இருந்து தப்பிக்க பாஜகவில் சேர்ந்தார் என்றும் கூறியிருந்தார். அது அசோக் சவான் என பலரும் கூறிய நிலையில், அது நான் இல்லை என அசோக் சவான் மறுத்துள்ளார். “ராகுல் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். அது நான்தான் என கூறுவது உண்மையல்ல” என்றார்.
Similar News
News February 10, 2026
கூட்டணி கட்சிகளிடம் நேர்மை இல்லை: கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி மற்றவர்களுக்காக உழைப்பதுபோல் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் தங்களுக்கு உழைப்பதில்லை என கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி, NDA கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு தற்போது வரை கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் பேசிய அவர், 2014, 2019 தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைக்காததால்தான் தோல்வி அடைந்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.
News February 10, 2026
Insurance எடுக்கும்போது கண்டிப்பா NOTE THIS..

காப்பீடு எடுக்கும்போது, ஒரு நிறுவனத்தின் ‘Claim Settlement Ratio’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நிறுவனம் எவ்வளவு பேருக்கு இன்ஷூரன்ஸ் தொகையை செட்டில் செய்திருக்கிறது என்பதை CSR தான் சொல்லும். பொதுவாக, 95% க்கும் அதிகமான CSR விகிதத்தைக் கொண்ட நிறுவனங்கள் நம்பகமானவை. இக்கட்டான சூழலில் கிளைம் செய்து வேகமாக பணத்தை பெறவேண்டும் என்றால், அதிக CSR உள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. SHARE.
News February 10, 2026
தங்கம்: ஒரேயடியாக 40% சரிவு.. வியாபாரிகள் பெரும் அதிர்ச்சி

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நகைக் கடைகளில் கடந்த டிசம்பர் மாதத்தை விட 35 – 40% விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தை மாதம் திருமண சீசன் இருந்தபோதிலும் இந்த விற்பனை சரிவானது நிகழ்ந்துள்ளதாம். கடந்த சில வாரங்களாக மக்கள் காயின், பார்களாகவே தங்கத்தை வாங்க விரும்புகிறார்களாம். இதனால், தங்க நகை செய்வோருக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.


