News May 8, 2024

‘ஒட்டு மா’ மரங்களை உருவாக்கிய முகலாயர்கள்

image

இந்திய வரலாற்றில் முகலாயர்களையும் மாம்பழங்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படும் முகலாயர்களின் ஆட்சியில்தான், பல புதிய மா ரகங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அந்த வகையில், முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி, அதில் வேறு வகையான சிறு மா கன்றை ஒட்டி வளர்த்து, புதிய மாங்கனிகளை விளைக்கும் ‘ஒட்டு மா’ என்ற மர உருவாக்க முறை நடைமுறைக்கு வந்தது.

Similar News

News September 24, 2025

விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது: திருமாவளவன்

image

திமுக அரசுக்கு எதிரான கருத்துகளை விஜய் வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது என்றும் பரப்புரைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விஜய்க்கு புதிதாக தெரியலாம், ஆனால் அவை எல்லோருக்கும் இருப்பவை தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் விஜய் வாய் திறந்து பேசியதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

News September 24, 2025

‘அம்மா GOOD BYE.. நான் சாகப்போறேன்’

image

மகாராஷ்டிரா, சந்திராபூரில் அனுராக் அனில் போர்கார்(19) என்ற மாணவரின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., கோரக்பூரில் ஒரு மெடிக்கல் காலேஜில் அவர் சேர இருந்த நாளில், ‘அம்மா எனக்கு டாக்டராக விருப்பமில்லை நான் சாகிறேன்’ என கடிதம் எழுதி அனுராக் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வில் அனுராக், தேசிய அளவில் 1,475-வது ரேங்க் (99.99 Percentile) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2025

எந்த பிரச்சனைக்கு என்ன சாப்பிடலாம்?

image

சில பொதுவான பிரச்னைகளுக்கு நமது அன்றாட உணவு மூலம் தீர்வு காணலாம். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நீண்ட நாள் நலமாக வாழ வழிவகை செய்கிறது. எந்த பிரச்சனைக்கு என்ன உட்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!