News December 5, 2024
நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட கார் இதுதான்

இந்திய மார்க்கெட்டில் SUV மாடல் கார்களின் ஆதிக்கத்தை மாருதி சுசூகியின் Baleno உடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 16,293 Baleno கார்கள் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் Creta 15,452, Tata Punch 15,435, Tata Nexon 15,239 கார்களை விற்பனை செய்துள்ளன. Baleno, Creta, Punch, Nexon, Ertiga, Brezza, Fronx, Swift, Wagon R, Scorpio முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
Similar News
News September 11, 2025
சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பும்

இந்தியாவில் ஆன்மிக குருக்களுக்கு எப்போதுமே மக்களிடம் பேராதரவு உண்டு. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் அதிக ஆன்மிக குருக்கள் தோன்றியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி உலகளவில் ஆசிரமங்களை நிறுவியது முதல் அவர்களின் சாம்ராஜியங்கள் விரிவடைந்துள்ளன. அந்த வகையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, இந்திய சாமியார்களின் சொத்து மதிப்பை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 11, 2025
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை செக் பண்ணுங்க

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE
News September 11, 2025
சற்றுமுன்: அடுத்த 1 மணி நேரத்திற்கு அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.