News August 17, 2024
நல்ல கூட்டணியை கெடுத்தது அண்ணாமலைதான்: ராஜூ

நல்ல கூட்டணியை கெடுத்தது அண்ணாமலைதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், அதிமுக-பாஜக இடையே நல்ல கூட்டணி இருந்தது. அதை கெடுத்தது அண்ணாமலைதான். இதற்காக அதிமுக வருத்தப்படவில்லை என்று கூறினார். அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 25, 2025
ராசி பலன்கள் (25.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 25, 2025
புஸ்ஸி ஆனந்த், ஆதவிடம் CBI தீவிர விசாரணை

41 பேர் உயிரிழந்த கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணையில் தவெக தலைவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


