News March 17, 2024

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நாள்

image

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோகமான ஒன்றாகும். இதில் லீக் சுற்றிலேயே தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதில் மார்ச் 17இல் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக கங்குலி 66, யுவராஜ் 47 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

Similar News

News August 6, 2025

LGBTQIA திருமணங்களை அரசு அனுமதிக்கணும்: ஐகோர்ட்

image

ஒரே பாலித்தனவர்கள், திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தமிழக அரசு தகுந்த உத்தரவிட சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்தான வழக்கின் தீர்ப்பில், கல்வி & வேலைவாய்ப்புகளிலும் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

News August 6, 2025

இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம்: TN அரசு

image

உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும் என்று TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவிரி பணியில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன் காக்கும் வகையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டது. அதேபோல், முதற்கட்டமாக 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News August 6, 2025

ED-க்கு ₹30,000 அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்

image

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ED-க்கு ₹30,000 அபராதமாக சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததால் ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு அபராதத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ED சோதனையை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!