News August 26, 2025
நள்ளிரவு முதல் தொடங்கியது.. மிஸ் செய்யாதீங்க

‘அக்னிவீர்’ திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கை, ஈரோட்டில் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் செப்.7 வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோர், தீவிர பயிற்சிக்கு பின், ராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவர். கூடுதல் எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News August 26, 2025
பொது அறிவு வினா- விடை!

1. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
2. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. பெண்களை முதல்முதலில் காவல்துறையில் சேர்த்த நாடு எது?
4. டேபிள் டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் என்ன?
5. இரட்டைப் புலவர்களின் பெயர் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 26, 2025
திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது: தமிழிசை

திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டுமென தமிழிசை தெரிவித்துள்ளார். அமைச்சர் TRB ராஜாவின் மகன் <<17517914>>அண்ணாமலையிடம் பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து<<>> கையில் வாங்கினார். இச்சம்பவம் விவாதமான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, கல்வி நிறுவனங்களில் விருத்தினர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியது கடமை. அங்கு தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரி கிடையாது என்றார்.
News August 26, 2025
பிரபல நடிகர் விவாகரத்து.. ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர்!

பிரபல நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர், விவாகரத்து <<17487419>>செய்வதாக <<>>வெளியான செய்திகளில் உண்மையில்லை என கோவிந்தாவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பஹ்லாஜ் நிஹலானி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்குள் விவாகரத்து பெற தூண்டும் எந்த ஒரு பிரச்னையையும் தான் பார்க்கவில்லை என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், விவாகரத்து குறித்து இன்னும் கோவிந்தாவும், சுனிதாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.