News February 1, 2025

IT: Old regime vs New regime

image

பழைய வரி முறையின்படி ₹10 லட்சம் வருவாய்க்கு ₹62,500 வரி செலுத்த வேண்டும். ஆனால், புதிய முறையில் வரி இல்லை. பழைய முறையில் ₹15 லட்ச வருவாய்க்கு ₹1,87,500 வரி., புதிய முறையில் அதுவே ₹1,05,000 மட்டும்தான். பழைய முறையில் ₹20 லட்சத்துக்கு ₹3,37,500 வரி. புதிய முறையில் ₹2,00,000 மட்டும்தான். இது, பழைய வரி முறையில் வீட்டு வாடகை ₹1 லட்சமும், 80C ₹1.5 லட்சமும் குறைத்துவிட்டு கணக்கிடப்பட்டது.

Similar News

News March 2, 2026

37 மணி நேரம் பயணித்து தாக்கிய US விமானங்கள்!

image

US-ன் ‘B-2 Spirit Stealth Bomber’ விமானங்கள், ஈரானின் பூமிக்கடியில் இருக்கும் ஏவுகணை மையங்களை குறிவைத்து தாக்கி அழித்திருப்பதாக US அறிவித்துள்ளது. ஈரான் அருகிலுள்ள தங்கள் விமான தளங்களை பயன்படுத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், மிசோரியில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொண்டு, சுமார் 37 மணி நேரம் பறந்து இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.

News March 2, 2026

BREAKING: மொத்தமாக மாறினர்.. விஜய்க்கு இழப்பு

image

திமுக அளிக்கும் 25 தொகுதி ஆஃபரை ஏற்க முடியாது என காங்., வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என காங்., MLA-க்களிடம் கருத்து கேட்டதில், பெரும்பாலானோர் திமுகவுடனே செல்ல வலியுறுத்தினராம். முன்னதாக, காங்., தரப்பிலிருந்து பலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இச்செய்தி விஜய் தரப்புக்கு ஏமாற்றமளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

பாலியல் வழக்கில் சிக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

image

பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!