News August 2, 2024

ஆடிப்பெருக்கன்று மாங்கல்யம் மாற்றும் நேரம்

image

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. புதுமணப் பெண்கள், சுமங்கலிகள் இந்த நாளில், புதிய தாலி கயிறை தங்களது கணவன் கையால் கட்டிக்கொள்வது ஐதீகம். இந்த சம்பிரதாயத்தை, நாளை காலை 7.35-8.50 மணி, காலை 10.35-11.55 மணிக்குள் ஆறுகள், நதிகளில் நீராடிய பிறகு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடியபின், அம்மனுக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News December 6, 2025

அமெரிக்காவில் தடுப்பூசியில் புதிய சர்ச்சை!

image

கல்லீரலை தாக்கும் Hepatitis B வைரஸுக்கான தடுப்பூசி, WHO பரிந்துரைப்படி இந்தியா உள்பட பல நாடுகளிலும், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போடப்படுகிறது. ஆனால், USA-வில் தாய்க்கு தொற்று இருந்தால் மட்டுமே தடுப்பூசி அவசியம். இல்லையெனில் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

News December 6, 2025

தேர்தல் கூட்டணி.. அறிவித்தார் செங்கோட்டையன்

image

பாஜக தன்னை தவெகவுக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவருடைய கொள்கைதான் அனைத்துத் தொண்டனுக்கும். அது தனக்கும் பொருந்தும் எனக் கூறிய அவர், அதிமுக – தவெக கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என உறுதிபட அறிவித்தார். மேலும், மாபெரும் மக்கள் சக்தியுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

image

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

error: Content is protected !!