News April 6, 2024
இது நீதியை விரும்பும் தேசத்தின் குரல்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது வாக்குறுதிகளின் பட்டியல் மட்டுமல்ல, அது நீதியை விரும்பும் தேசத்தின் குரல் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்றார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
Similar News
News January 20, 2026
தேர்தல் வியூகம்: நாளை பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை

தமிழ்நாட்டிற்கு ஜன. 23-ம் தேதி மோடி வரும் நிலையில், அதற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக நேற்றே டெல்லியில் உள்ள பியூஷ் கோயல் இல்லத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் முக்கிய <<18900071>>ஆலோசனை<<>> நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நாளை காலை மீண்டும் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக உயர்மட்ட குழுவின் ஆலோசனை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 20, 2026
மோதல் அரசியலுக்கு விதை தூவும் கவர்னர்: CPI

அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் TN-ல் மோதல் அரசியலுக்கு விதை தூவுகிறார் கவர்னர் ரவி என CPI மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஆரம்ப நாளிலிருந்தே அரசியலமைப்பை மீறி, TN அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். மேலும், ஆளும் அரசு மீது எந்த ஆதாரமும் இல்லாத அரசியல் அவதூறுகளை அறிக்கையாக வெளியிட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News January 20, 2026
பாஜக தேசிய தலைவரின் சொத்து மதிப்பு இதுதான்!

பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு ₹3.08 கோடி மதிப்பிலான சொத்துகளும், ₹56 லட்சம் கடனும் உள்ளது. மேலும், அவரது மனைவியிடம் ₹60,000 ரொக்கமாகவும், வங்கி கணக்கில் ₹98 லட்சமும் உள்ளதாம். அவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


