News June 27, 2024
இது அம்பேத்கர் பிறந்த பூமி: அஜித் பவார்

மனுதர்மத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை என்று அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்க வேண்டுமென தீவிர வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “இது பூலே, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிறந்த பூமி. முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற இம்மாநிலத்தில் மனுதர்மத்தை பாடத்தில் சேர்க்க வாய்ப்பில்லை” என்றார்.
Similar News
News December 29, 2025
மீண்டும் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இன்று தொடங்கி ஜன.4-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கையோடு குடையை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.
News December 29, 2025
2025-ன் முக்கிய அரசியல் நிகழ்வுகள்

2025-ம் ஆண்டும் தமிழக அரசியலில், எதிர்பாராத பல திருப்பங்களும், அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகளும் ஏற்பட்டன. பரபரப்புக்கு பஞ்சமில்லாத 2025-ல் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க. இதை SHARE பண்ணுங்க.
News December 29, 2025
பதக்கம் வென்ற செஸ் நட்சத்திரங்களுக்கு PM வாழ்த்து

FIDE வேர்ல்டு ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். சர்வதேச அளவில் செஸ்ஸில் தடம் பதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு PM மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இருவரின் அடுத்தடுத்து முயற்சிகள் வெற்றி பெறவும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.


