News April 6, 2025
விடிய விடிய மழை கொட்டும்

இன்றிரவு நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை & பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
LSG ஓனரை அட்டாக் செய்த பண்ட்?

KKR-க்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸின் போது, LSG-யின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என ரிஷப் பண்ட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறமாட்டேன் எனவும், தங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன் என பண்ட் பதிலளித்தார். LSG உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடனான பிரச்னையால் தான், ஹேப்பியாக இல்லை என அவர் கூறியதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News April 9, 2025
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.. சீமான் வலியுறுத்தல்

கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தேர்தலின்போது கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் அளிப்போம் என திமுக வாக்குறுதி அளித்து இருந்ததாக சீமான் கூறியுள்ளார். திமுக அரசின் ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ரூ.100 மானியம் அளித்து மக்கள் துயரத்தை போக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!