News April 5, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் & மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News November 15, 2025
BREAKING: இந்தியாவுக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக KL ராகுல் 39 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி 3 ரன்களை எடுப்பதற்குள் இந்தியா, வரிசையாக 3 விக்கெட்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
News November 15, 2025
யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்

யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளின் வளர்ச்சிக்காக 76 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அமைப்பில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இக்குழுவில் ஏற்கெனவே, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குரானா, கரீனா கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
கரூரில் விஜய் கட்சியினருக்கு அனுமதி

கரூரில் SIR-க்கு எதிரான தவெக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கூட்ட நெரிசலுக்கு பின் கரூரில் நடக்கும் தவெகவின் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், மேடை அமைக்க கூடாது, சிறப்பு அழைப்பாளர்கள் வந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


