News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News December 16, 2025
நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.
News December 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 16, மார்கழி 1 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 16, 2025
எல்லா வீரர்களும் VHT-ல் விளையாட வேண்டும்: BCCI

விஜய் ஹசாரே கோப்பை(VHT) டிச.24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தேசிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே விராட், ரோஹித் VHT-ல் கலந்துகொள்ள பிசிசிஐ கூறியிருந்த நிலையில், இப்போது அது அனைவருக்கும் பொருந்தும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயஷ் ஐயருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


