News August 16, 2025
வரவழைத்து சந்திப்பது சரி அல்ல: பிரேமலதா விமர்சனம்

விஜய் முதலில் களத்திற்கு வரட்டும், வீட்டிற்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார். போராடுபவர்களை களத்தில் சந்திக்காமல் வரவழைத்து சந்திப்பது சரியல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். விஜயகாந்தை, விஜய் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டால் அவரது போட்டோவை பயன்படுத்த தவெகவுக்கு அனுமதி அளிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். தற்போது விஜய்யை விமர்சித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News August 16, 2025
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக்குறைவால் காலமானார். ஆக.2 ஆம் தேதி குளியலறையில் விழுந்ததால் சோரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
2026 தேர்தல்: திமுக ஆட்சியால் விசிகவுக்கு பின்னடைவா?

2021 வரை அதிமுக (மாநிலம்), பாஜகவுக்கு (மத்திய) எதிராக கடுமையான போராட்டங்களை விசிக முன்னெடுத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகு வேங்கை வயல், கவின் ஆணவக்கொலை, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மென்மையான போக்கையே விசிக கடைபிடித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது 2026 தேர்தலில் விசிக களமிறங்கும் தொகுதிகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
AK 64 அப்படியான படம் அல்ல: ஆதிக்

‘குட் பேட் அக்லி’ முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கூலி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், முன்னணி ஹீரோக்களின் படங்களை அனைவரும் ரசிக்கும்படியாக எடுங்கள் என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். இந்நிலையில், ‘AK 64’ படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அதன் இயக்குநர் ஆதிக் கூறியுள்ளார். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?