News August 11, 2024
இது தேசத்தை பற்றியது அல்ல: மஹுவா மொய்த்ரா

செபி அமைப்பின் மீது ஹிண்டன்பெர்க் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தேசத்தின் மீதானது அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா காட்டமாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டால், ஹிண்டென்பெர்க் தேசத்தை அவமதிப்பதாக பாஜகவினர் குரல் எழுப்பி வருகின்றனர். அதற்கு, X பதிவின் மூலம் பதிலளித்திருக்கும் மொய்த்ரா, குற்றம்சாட்டப்பட்டவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
MGR-யை அவமதிக்கும் நோக்கமில்லை: திருமாவளவன்

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என <<17349030>>திருமாவளவன்<<>> தெரிவித்தார். இதற்கு <<17351092>>அதிமுகவினர் கடும் எதிர்ப்பு<<>> தெரிவித்தனர். இதுபற்றி பேசிய திருமா, தமிழக அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கியது என்ற உரையில் MGR-யை குறிப்பிட்டனே தவிர, அவரை அவமதிக்கும் நோக்கமில்லை என்றார். MGR-யை ஒரு சாதிக்குள் சுருக்கவில்லை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
TN அரசின் கல்வி கொள்கைக்கு கமல் வரவேற்பு

TN அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது பதிவில், மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கம் செய்திருப்பதும், அநீதியான நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை என புகழ்ந்துள்ளார்.