News April 12, 2025
திமுகவை வேரோடு அகற்றுவது முக்கியம்: PM மோடி

அதிமுக – பாஜக கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) உடன் இணைந்து வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம் எனவும் விடா முயற்சியுடன் சேவை செய்வோம் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும், ஊழல் திமுகவை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம் என்றும் சூளுரைத்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 14, கார்த்திகை 28 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News December 14, 2025
கேரளா உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக படுதோல்வி

கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. உப்புதரா – 9, சின்னக்கானல் – 3, தேவிகுளம் – 1, மறையூர் – 1, தேவிகுளம் – 1 என 15 இடங்களில் திமுகவும், இடுக்கி-19, பாலக்காடு – 4, திருவனந்தபுரத்தில் – 2 என 25 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டு இருந்தன. அங்குள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4-ல் வெற்றி பெற்றுள்ளன.
News December 14, 2025
பூரண மதுவிலக்கு தோல்வி அடைந்த திட்டம்: MP கார்த்தி

குஜராத்தில் பூரண மதுவிலக்கு என்பது காகிதத்தில் இருக்கிறதே தவிர, காந்தி பிறந்த போர்பந்தரில் தான் அதிகப்படியான மது இறக்குமதியாவதாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பூரண மதுவிலக்கு என்பது உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மதுபயன்பாட்டை கட்டுப்படுத்தலாமே தவிர, பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?


