News August 20, 2025
கம்யூனிஸ்ட் கட்சியை காட்டிக் கொடுத்ததே திமுக தான்: EPS

கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக நிதி கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியுமா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த 2.0, 3.0 என கடைசி வரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம் என்றும் விமர்சித்தார்.
Similar News
News August 20, 2025
தங்கம் விலை இதுவரை ₹2,120 குறைந்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த 10 நாள்களில் ஒருநாள் கூட உயரவில்லை. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹2,120 வரை குறைந்து இன்று ₹73,440க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை நேற்று ₹1000, இன்று ₹1000 என 2 நாளில் ₹2000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 20, 2025
கட்சி தாவுபவர்களுக்கே பதவி.. திமுகவினர் குமுறல்

கோவை பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, கட்சிதாவி வருபவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை முன்னாள் அதிமுக எம்பி ஏ.பி.நாகராஜன், கணபதி ப.ராஜ்குமார், எம்எல்ஏ ஆறுகுட்டி, நாதக ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வந்த வேகத்தில் கட்சிப் பதவி முதல் MP வரை ஆக்கியுள்ளதாகவும் காலங்காலமாக உள்ள திமுகவினர் குமுறுகின்றனர். 2026 தேர்தலில் கொங்கில் கோலோச்சுமா திமுக?
News August 20, 2025
GST வரியில் மாற்றம்.. இன்று முக்கிய முடிவு

GST தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு குறைந்த வரி விதிப்பு முறை இந்த ஆண்டு தீபாவளிக்குள் கொண்டு வரப்படும் என PM <<17409932>>மோடி <<>>சமீபத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளன. இதனால், பல பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.