News May 30, 2024
இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்பது உறுதி

பதவி விலகப்போகும் பிரதமராக மோடி இருப்பதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பின் INDIA கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறப்போகிது என்பது தெளிவாகிவிட்டது என்ற அவர், ஜூன் 4ஆம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகுவார், அவருடன் சேர்ந்து உள்துறை அமைச்சரும் விலகுவார் என்றார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு INDIA கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும் என்றார்.
Similar News
News November 26, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.
News November 26, 2025
என்னை மட்டுமே பழி சொல்றாங்க: கம்பீர் வேதனை

நான் பயிற்சியாளராக நீடிக்க தகுதி உள்ளவனா, இல்லையா என்பதை BCCI தான் முடிவு செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கு இந்தியாவின் கிரிக்கெட் தான் முக்கியம், தனிமனிதன் முக்கியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு அனைத்து வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழி என்னில் இருந்தே தொடங்குகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. டிச.23 அன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும். இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின், 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.


