News June 28, 2024

பதவியில் இருந்து மோடியை அகற்றுவதே நல்லது: ஈவிகேஎஸ்

image

பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகிறமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நல்லது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது என்ற அவர், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார். இந்திரா காந்தியின் புகழை பாஜகவுக்கு சீர்குலைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

தங்கம் விலை மொத்தம் ₹4,600 குறைந்தது

image

அமெரிக்கா – ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
இம்மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. மார்ச் 1-ம் தேதி சவரனுக்கு ₹1,26,200-ஆக இருந்த தங்கம் விலை சுமார் ₹4,600 குறைந்து ₹1,21,600-க்கு இன்று (மார்ச் 4) விற்பனை செய்யப்படுகிறது.

News March 4, 2026

பழி போட்டு முடக்க பார்க்கிறார்கள்: விஜய்

image

சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு தஞ்சை கூட்டத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன்மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 4, 2026

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

image

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!