News August 8, 2025
பாலியல் உறவுக்கான வயது 18 ஆக இருப்பதே நல்லது: அரசு

பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் என SC-ல் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இளம் பருவ காதல் என்ற போர்வையில் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவது ஆபத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளது. பரஸ்பர பாலியல் உறவுக்கான சம்மத வயதை 16 ஆக குறைக்க வேண்டும் என வழக்குகளின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பரிந்துரைத்திருந்தார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 8, 2025
BREAKING: ஆக.13-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஆக.13-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News August 8, 2025
சென்னை ஐகோர்ட் நீதிபதியின் விநோத அழைப்பு!

ராமதாஸ், அன்புமணி <<17340719>>இருவரிடம் தனியாக பேச வேண்டும்<<>> என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளது விநோதமானது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குடும்பப் பிரச்னை அல்ல; கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனக் கூறும் சட்ட வல்லுநர்கள், வழக்கை விசாரிப்பதற்கு முன்பு வேண்டுகோளாக விடுத்துள்ளதால் இதனை ஏற்பது ராமதாஸ் மற்றும் அன்புமணியின் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறியுள்ளனர்.
News August 8, 2025
உலகம் முழுவதும் பரவிய ‘முழுமுதற் கடவுள் விநாயகர்’

விநாயகரை இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில், மக்கள் வழிபடுகின்றனர். இவற்றில் உருவமும், வழிபடும் மொழியும் மட்டுமே கொஞ்சம் மாறுபடுகிறது. ஆனால், அனைத்து இடங்களிலும் இவர் தான் முதற்கடவுள். அப்படி உலகத்தில் பல்வேறு நாடுகளில் விநாயகர் வழிபடுவதை அடுத்தடுத்த போட்டோக்களில் கொடுத்துள்ளோம். இவற்றில் எது உங்களை ஆச்சரியப்படுத்தியது.