News August 26, 2024
கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட உகந்த நேரம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம் எது என புராணத்தில் கூறப்பட்டிருப்பதை இங்கு பார்க்கலாம். கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்தார் என்பதால், பகலில் கொண்டாடுவதை விட இரவு 8-9 மணிக்குள் காெண்டாடுவதே சிறப்பு என்று புராணம் கூறுகிறது. பகலில் விரதமிருந்து மாக்கோலம் இட்டு, கிருஷ்ணரின் கால் பாதத்தை வாசலில் இருந்து பூஜை அறை வரை வரைந்து வழிபடுவது சிறப்பு என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
இஷான் கிஷனின் மரண அடி.. 14 சிக்சர்களுடன் சதம்

தனது அதிரடி ஆட்டத்தால் சையத் முஸ்டாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் இஷான் கிஷன். அதே பார்மில் இப்போது விஜய் ஹசாரேவிலும் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். கர்நாடகாவுக்கு எதிராக 33 பந்துகளில் சதம் அடித்து இஷான் வியக்க வைத்துள்ளார். 7 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் உட்பட 125 ரன்களை விளாசி ஜார்க்கண்ட் 412 ரன்களை குவிக்க அவர் உதவினார்.
News December 24, 2025
நகைக் கடன்.. முக்கிய அறிவிப்பு வெளியானது

2025-ல் மார்ச் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளில் நகைக் கடன் அளவு இருமடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது, தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், நகைக் கடன் வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க RBI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நகை கடன் மதிப்பு <<18646177>>வரம்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.<<>> இதனால், அதிகளவில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
News December 24, 2025
கடற்படை ரகசியங்களை Pak-க்கு விற்ற நபர் கைது

இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கடத்திய கும்பலை கர்நாடக போலீசார் அதிரடியாக முடக்கி வருகின்றனர். ஏற்கனவே இருவர் பிடிபட்டுள்ள நிலையில், குஜராத்தை சேர்ந்த ஹிரேந்திரகுமார் என்பவரை தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பணத்திற்காக ரகசியங்களை விற்றது தெரிய வந்துள்ள நிலையில், UAPA உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


