News September 26, 2025
அமைச்சரவையில் பங்கு கேட்பது உரிமை: K.S.அழகிரி

சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம் என கூறுவது வதந்தி என்று தெரிவித்தார். ராகுலுக்கு அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலின் சிறந்த நண்பர்; அவரிடம் எங்களின் உரிமையை கேட்கிறோம், அதில் எந்த தவறும் இல்லை என்றார்.
Similar News
News September 26, 2025
இப்போதான் 4G’யே வரீங்களா.. BSNL மீது கடும் விமர்சனம்!

நாளை முதல் இந்தியா முழுவதும் 4G சேவையை வழங்கவுள்ளதாக BSNL அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டெலிகாம் நெட்வொர்க்குகள் விரைவில் 6G கொண்டுவந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘நீங்க ரொம்ப Slow BSNL’ என பயனர்களிடம் இருந்து கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News September 26, 2025
EPS பிரசாரம் செய்த இடத்தில் விஜய்க்கு அனுமதி

நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஆனால், கரூரில் பரப்புரை செய்வதற்கு இதுவரை அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால் கோர்ட்டை நாட தவெக திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் நேற்று EPS-ம் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 26, 2025
40 வயதில் தமிழ் நடிகை 2வது திருமணமா?

சிவப்பதிகாரம், மகாராஜா போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மம்தா மோகன்தாஸுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தமிழில் ‘மகாராஜா’, ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்த Passion Studios தயாரிப்பாளர் சுதனை மம்தா திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.