News September 13, 2024
40,000 TCS ஊழியர்களுக்கு I.T. நோட்டீஸ்

40,000 TCS ஊழியர்களுக்கு I.T. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னணி நிறுவனமான TCSஇல் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 2024-25 மார்ச் வரையிலான நிதி காலாண்டுக்கான வரி முழுமையாக செலுத்தவில்லை எனக் கூறி, ₹50,000 – ₹1 லட்சம் வரை செலுத்தக் கோரி நோட்டீஸ் வந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால், TDS கிளைம் அப்டேட் செய்யாததே காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 17, 2025
படுகாயம் ஏற்பட்டால் மாற்று வீரருக்கு BCCI அனுமதி

உள்ளூர் போட்டிகளின்போது படுகாயம் அடைந்தவர்களுக்கு பதில் மாற்று வீரர்களை களமிறக்க BCCI அனுமதி அளித்துள்ளது. இது ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற முதல்தர போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்னதாக, இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் களமிறங்கினார் பண்ட். அதேபோல், கை தோள்பட்டை காயத்துடன் விளையாடினார் இங்கி.,ன் வோக்ஸ். இந்நிலையில் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
ரெய்டில் சிக்கவுள்ள அடுத்த அமைச்சர்கள் யார் யார்?

அமைச்சர் ஐ.பி.,க்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடக்கிறது. ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்புமாம். அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), KKSSR.ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன்(சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ரெய்டு தி.மலையில் என EPS கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம்.
News August 17, 2025
‘கூலி’யால் பின்வாங்கும் மதராஸி

கிடைக்கும் யூடியூப் சேனல்களில் எல்லாம் நேர்காணல்கள், ஆடியோ லாஞ்ச்சில் துதிபாடல்கள், அல்டிமேட் ஸ்டார் காஸ்ட் என பல இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததால் ‘கூலி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், செப்.5-ல் ரிலீஸாகவுள்ள ‘மதராஸி’ படத்துக்கு அதிக புரமோஷன் செய்து ரசிகர்களுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை அளிக்கப் போவதில்லை என AR முருகதாஸ் கூறியுள்ளார். வெற்றி பெறுவாரா SK?