News September 23, 2025

விஜய்யை துரத்தும் IT வழக்கு

image

புலி படத்திற்காக பெறப்பட்ட ₹15 கோடியை மறைத்ததாக, 2022-ல் ₹1.50 கோடி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து HC-ல் விஜய் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், இது காலதாமதமான நடவடிக்கை எனவும், எனவே IT பிறப்பித்த உத்தரவை செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அபராதம் விதித்தது சரிதான் என IT தரப்பு கோரியது. இதனையடுத்து அக்.10-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

லெஜண்ட் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்!

image

80s, 90sகளில் கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் டிக்கி பேர்ட். வீரராக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் கிரிக்கெட் மீதான காதலால், 66 டெஸ்ட், 69 ODI, 3 உலக கோப்பை பைனல் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். 1996-ல் இவர் கடைசியாக அம்பயரிங் செய்த லார்ட்ஸ் டெஸ்டில் தான் டிராவிட், கங்குலி அறிமுகமானார்கள். இவரது மறைவு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.RIP

News September 23, 2025

பிகினியில் கவனிக்க வைத்த சாய் பல்லவி (PHOTOS)

image

பிரேமம் முதல் அமரன் படம் வரை கிளாமர் இல்லாமல் நடித்ததால், சாய் பல்லவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில், தனது தங்கை பூஜா கண்ணன் உடன் பிகினி உடையில் உள்ள பல்லவியின் போட்டோஸ் வைரலாகி எதிர்ப்புகளையும், ஆதரவையும் பெற்று வருகிறது. ‘ஆடை சுதந்திரம் அவருடையது’ எனவும், ‘சினிமா நிகழ்ச்சிகளில் ஆடை சற்று விலகினாலே உடனே அதை சரிசெய்யும் சாய் பல்லவியா இது?’ என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News September 23, 2025

H1B விசா – கெட்டதிலும் நல்லது நடந்துள்ளது: IIT இயக்குநர்

image

H1B விசா கட்டண உயர்வை, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளதாக பார்க்க வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் நடவடிக்கையை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இந்திய மாணவர்களிடம் US செல்லும் மோகம் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் இங்கேயே தொடர்வதால் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும், ஆராய்ச்சி துறை மேம்படும் என்று காமகோடி பேசினார்.

error: Content is protected !!