News March 17, 2024

காஞ்சிபுரத்தில் அமலுக்கு வந்தாச்சு!

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 19, 2024

கஞ்சா விற்பனை செய்த 3 ரவுடிகள் கைது

image

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த வசந்த் (28), காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (28), சிகாமணி (30) ஆகிய 3 ரவுடிகளையும் பிடித்து, ரூ.15,000 மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 19, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News November 19, 2024

அழிந்து வரும் மரங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 36.8 சதுர கி.மீ. மட்டுமே வனத்துறை உள்ளது. வருவாய் தரும் பனை மற்றும் ஈச்ச மரங்களை, ஏரிக்கரையோரத்தில் இருந்து வேருடன் வெட்டி, பிற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு, 10 மாதங்களில் மட்டும் 20,200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.