News November 2, 2025

IT ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆனால் ஒரு கண்டிஷன்

image

தற்போதைய பணிநீக்கத்திற்கு பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டு புதிதாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் AI-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 6,000 பேரை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட், அடுத்ததாக 9,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 3, 2025

Wheel Chair-ல் பிரதிகாவின் கொண்டாட்டம்!

image

கோப்பையை கையில் ஏந்த இந்திய அணியினர் ரெடியான போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி அதை ரசித்து கொண்டிருந்தார் பிரதிகா ராவல். அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன், அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் இருந்த படியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது

News November 3, 2025

திமுக கூட்டணியில் தேமுதிகவா?

image

SIR தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் EPS மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா, திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில், தேமுதிக பங்கேற்றது கூட்டணிக்கு அச்சாராமா என கேள்வி எழுந்துள்ளது.

News November 3, 2025

எந்த உடல்வலியையும் விரட்டும் கசாயம்!

image

மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை, கை, கால் என எந்த வலியையும் சித்தரத்தை கசாயம் விரட்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✦தேவை: சுக்கு பொடி, சித்தரத்தை, சீந்தில் கொடி, பனங்கற்கண்டு ✦செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் 200 மில்லி நீரில் போட்டு, 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பிறகு, வடிகட்டி ஆறவைத்து தேவைகேற்ப பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்,

error: Content is protected !!