News August 11, 2025
US செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ

அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 2 மாதங்களில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். 6,500 கிலோ எடையுள்ள பிளாக்-2 ப்ளூபேர்டு செயற்கைக்கோள் 2 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஜூலை 30-ம் தேதி நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த <<17251055>>NISAR <<>>செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 11, 2025
10வது நாள்… வலுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3,000 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது. மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போரட்டம் தொடங்கிய நிலையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
News August 11, 2025
இன்றே கடைசி: AIIMS-ல் 3,500 பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள AIIMS ஹாஸ்பிடல்களில் 3,500 நர்ஸிங் ஆபிஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். B.Sc Nursing அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டவர்கள் <
News August 11, 2025
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழை எச்சரிக்கை

ஆக.13-ல் வடமேற்கு, அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.