News March 19, 2025

ISRO: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

image

நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. GSLV LVM3 ராக்கெட்டுக்கான CE20 கிரையோஜெனிக் E15 இன்ஜினின் சோதனை இங்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 100 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Similar News

News March 20, 2025

வாடிவாசலின் பணிகள் தொடக்கம்.. செம அப்டேட்

image

வெற்றிமாறன் மற்றும் சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் படம் ‘வாடிவாசல்’. ஆனால் படம் தொடங்கிய பாடாக தெரியவில்லை. தற்போது படத்திற்கான இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 20, 2025

அரசு பள்ளிகளில் 78,384 மாணவர்கள் சேர்க்கை

image

மார்ச் 1 முதல் 19ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் இதுவரை 78,384 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் வழியில் 14, 279 மாணவர்களும், ஆங்கில வழியில் 64,105 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

CSK அணியை அதிக முறையை வீழ்த்திய அணிகள் எவை?

image

ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணியை இதுவரை 3 அணிகள் மட்டுமே அதிக முறை வீழ்த்தியுள்ளது. மும்பை (18-21), லக்னோ (1-3), குஜராத் (3-4) உள்ளிட்ட அணிகள் சிஎஸ்கே அணியை அதிகமுறை தோற்கடித்துள்ளது. பெங்களூரு (22-11), கொல்கத்தா (20-11), டெல்லி (19-11), ராஜஸ்தான் (16-14), பஞ்சாப் (17-13), ஹைதராபாத் (16-6) உள்ளிட்ட அணிகளை சென்னை அணி அதிகமுறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!